டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை
x
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா - அமெரிக்க அதிபரின் மனைவி வருகை

நாளை நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ஜப்பான் சென்றடைந்து உள்ளார். வாஷிங்டனில் இருந்து தனிவிமானம் மூலம், ஜப்பான் சென்ற அவர், யொகோட்டா விமான தளத்தில் தரையிறங்கினார். அவரை ஜப்பான் வெளியுறவு அமைச்சர் மொட்டேகி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிஹாப்டர் மூலம் விடுதிக்கு சென்ற அவர், இன்று இரவு, ஜப்பான் பிரதமர் சுகாவுடன் இரவு உணவு அருந்த உள்ளார். மேலும், அமெரிக்க வீரர்களை நாளை சந்தித்து, ஜில் பைடன் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்