விண்வெளி சுற்றுலா திட்டம் - பில்லியனர்கள் சென்ற தூரம் எவ்வளவு?
விண்வெளி சுற்றுலா திட்ட போட்டியிலிருக்கும் பில்லியனர்கள் விண்ணில் சென்றுவந்த தூரம் எவ்வளது... விண்வெளியில் விமானங்கள் எதுவரையில் பறக்கலாம்...? எதுவரையில் ஏவுகணைகள் பறக்கலாம்...?
விண்வெளி சுற்றுலா திட்ட போட்டியிலிருக்கும் பில்லியனர்கள் விண்ணில் சென்றுவந்த தூரம் எவ்வளது... விண்வெளியில் விமானங்கள் எதுவரையில் பறக்கலாம்...? எதுவரையில் ஏவுகணைகள் பறக்கலாம்...? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... விண்வெளி பயணத்தை, சாமானியர்கள் சென்று வரும் சுற்றுலா பயணமாக்கி விட வேண்டும் என்ற போட்டியில் உலகின் பெரும் கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் ஜெப் பெசோஸ் ஆகியோர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 2020 ஆம் ஆண்டே 'க்ரூ ட்ராகன்' விண்வெளி ஓடம் மூலம் நாசா வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் சென்று திரும்பியது. இரண்டாவதாக கடந்த 11 ஆம் தேதி பிரிட்டன் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தமது குழுவுடன் ராக்கெட் விமானம் மூலம் விண்வெளி சென்று திரும்பிய நிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கேப்சூல் விண்கலம் மூலம் விண்வெளி சென்று திரும்பியிருக்கிறார். ரிச்சர்ட் பிரான்சனும், ஜெப் பெசோசும் விண்வெளியில் புவியீர்ப்பு விசையில்லாத ஜீரோ கிராவிட்டி பகுதிக்கு சென்று அங்கு சில நிமிடங்கள் மிதக்கும் சூழலை உணர்ந்ததும், பூமிக்கு திரும்பியுள்ளனர்.அதாவது ஜெப் பெசோஸ் 66.5 மையில் உயரம் வரையிலும், ரிச்சர்ட் பிரான்சன் 53.43 மையில் உயரம் வரையிலும் பயணித்து இருக்கின்றனர்.வளிமண்டலத்தின் பண்பும், கட்டமைப்பும் உயரே செல்ல செல்ல, மாறுபடும் சூழல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
Next Story