பெகாசஸ் செயலியை வாங்கியது யார்? - உள்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன்

ராகுல்காந்தி உள்பட 300 பேரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பெகாசஸ் செயலியை வாங்கியது யார்? - உள்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சம்மன்
x
ராகுல்காந்தி உள்பட 300 பேரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்ட விவகாரத்தில், துறை சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் பெகாசஸ் எனும் செயலியை உருவாக்கி உள்ளது. இதன்மூலம், குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிப்போரின் செல்போன்கள் உளவு பார்க்கப்படும். ஆனால், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்டோரின் செல்போன்களை உளவு பார்த்துள்ளனர். இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் அமளி எழுந்த நிலையில், அந்தச் செயலியை யார் வாங்கிவந்தது, ஒட்டுகேட்டு உளவு பார்த்தது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மத்திய உள்துறை, தொலைத் தொடர்புத் துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் பதிலளிக்க, நாடாளுமன்ற நிலைக்கு சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்கு, வரும் 28ஆம் தேதி விசாரிக்க உள்ளது. நாட்டு மக்களின் தனியுரிமை குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளதும் குறிப்பிடத்தக்கது.      


Next Story

மேலும் செய்திகள்