கடும் பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் - 3ம் அலையின் தாக்கம் எப்படி இருக்கும்?

கொரோனா 3ம் அலை இந்தியாவை தாக்கக்கூடும் என்ற அறிவுறுத்தலுக்கு மத்தியில், நோய்த்தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு..
கடும் பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வைரஸ் - 3ம் அலையின் தாக்கம் எப்படி இருக்கும்?
x
கொரோனா 3ம் அலை இந்தியாவை தாக்கக்கூடும் என்ற அறிவுறுத்தலுக்கு மத்தியில், நோய்த்தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி விவரிக்கிறது இந்தத் தொகுப்பு..இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.அண்டை நாடான இலங்கையில் தற்போது டெல்டா வைரஸால் 3 ஆம் அலை தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. கொரோனா 2ம் அலை பரவலில், 80 சதவீதம் பாதிப்புக்கு இந்த வகை வைரஸே காரணம் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கும் நிலையில், மூன்றாம் அலையின் தாக்கம் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுகிறது.அதேசமயம், கொரோனா 3ம் அலை ஐரோப்பிய நாடுகளில் பரவினாலும், தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக உயிரிழப்புகளும், மருத்துவத் தேவைகளும் வெகுவாகக் குறைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரங்களின் வரிசையில், அதிகபட்சமாக சென்னையில் 11 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.இதற்கு அடுத்தபடியாக, பெங்களூருவில் 10 சதவீதம், டெல்லி மற்றும் மும்பை நகரங்ளில் 7 சதவீதம், ஐதராபாத்தில் 5 சதவீதம்
பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.உருமாறி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கும்போது, தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தினால் மட்டுமே நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்து. 


Next Story

மேலும் செய்திகள்