அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம் பதிவு
அமெரிக்காவின் மேற்கு மாகாணங்கள் மற்றும் கனடாவின் மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது.
அமெரிக்காவின் மேற்கு மாகாணங்கள் மற்றும் கனடாவின் மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த மூன்று நாட்களாக கலிபோர்னியா, நெவாடா உள்ளிட்ட அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் வெய்யிலின் தாக்கம் மிக அதிகமாக தொடர்கிறது.கனடாவின் மேற்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுமார் 50 காட்டுத் தீ சம்பவம் நடந்த நிலையில், தீ பரவலை தடுக்க அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியா, வெப்ப அலை, கனடா காட்டுத் தீக்கள், வெறிச்சோடிய சாலைகள்.கலிபோர்னியாவின் பால்ம் ஸ்பிரிங்ஸ் நகரில் 45 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சாலைகள் வெப்பத்தில் தகிப்பதால், பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சில பகுதிகளில் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் புகழ் பெற்ற டெத் வேலி எனப்படும் மரணப் பள்ளத்தாக்குப் பகுதியில் 54 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அரேபிய பாலைவனப் பகுதிகளில் நிலவும் உச்சபட்ச வெப்பத்தை இது விஞ்சியுள்ளது. புவி வெப்பமயமாதலின் விளைவாக வெப்ப அலைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.
Next Story