மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 44 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஈராக் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 44 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
x
ஈராக் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈராக்கின் தெற்கு நகரமான நசிரியாவில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவமனையில், ஆக்சிஜன் டேங்க் வெடித்ததால் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதில் 44 பேர் உயிரிழந்ததுடன், 67 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைத்து மீட்புப் பணியைத் தீவிரப்படுத்தினர். இது குறித்து மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய அந்நாட்டு பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தீ விபத்தில் சிக்கிய சிலர் இன்னும் மீட்கப்படாமல் உள்ள நிலையில், இறந்தவர்களில் 2 பேர் மருத்துவமனை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்