தென் ஆப்பிரிக்காவில் தொடர் கலவரங்கள் - கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், கடைகளை சூறையாடி உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் தொடர் கலவரங்கள் - கலவரத்தில் 6 பேர் உயிரிழப்பு
x
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள், கடைகளை சூறையாடி உள்ளனர்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது ஆதரவாளர்களும் மக்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் ஜோகன்னஸ்பெர்க்கில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது, கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கடைகளை சூறையாடி அங்கிருந்து பொருட்களை திருடிச் சென்றனர். தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் சுட்டு, கலவரக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளதாகவும், வன்முறை சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தென் ஆப்பிரிக்க போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் கலவர சம்பவங்கள், மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று அந்நாட்டு அதிபர் சிரில் ரம்போசா கூறி உள்ளார். வன்முறை நிகழ்வுகளால் தடுப்பூசி செலுத்தும் பணி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்