மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் சில்வியா பிளாத்; தன் கணவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் - ஏலத்திற்கு விட முடிவு
புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின எழுத்தாளருமான சில்வியா பிளாத் தன் கணவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளன.
புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின எழுத்தாளருமான சில்வியா பிளாத் தன் கணவருக்கு எழுதிய காதல் கடிதங்கள் ஏலத்திற்கு வரவுள்ளன. சில்வியா பிளாத், சக கவிஞராகிய டெட் ஹியூக்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்வு கசந்து விடவே, தீவிர மன அழுத்தத்தில் இருந்த சில்வியா பிளாத், 1963ம் ஆண்டு தனது 30வது வயதில், வீட்டு சமையலறையில் உள்ள எரிவாயுவைத் திறந்து விட்டு, கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்புக்குப் பின் புலிட்சர் பரிசு பெற்ற முதல் கவிஞர் என்ற பெருமை கொண்டவர் பிளாத். இவர், தான் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், டெட் ஹியூக்சைப் பிரிந்து வாடிய சூழலில், காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதிய காதல் கடிதங்களும், அவரது திருமண மோதிரங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களுடம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. இவ்வளவு நாட்கள் இவற்றைப் பொக்கிஷமாக சில்வியா பிளாத்தின் மகள் புளோரிடா பிளாத் பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story