"Lime pie"- சாப்பிடும் போட்டி - உற்சாகத்துடன் போட்டியாளர்கள் பங்கேற்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் Lime pie எனப்படும் பிரபல இனிப்பு வகை உணவை சாப்பிடும் போட்டி நடந்தது.
இதில் 25 போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நிபந்தனையின்படி, போட்டியில் பங்கேற்றவர்களின் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், சீயட்டல் பகுதியை சேர்ந்த நிகோலஸ் லூரா என்ற இளைஞர், சுமார் 2 நிமிடங்களில், இனிப்பு முழுவதையும் சாப்பிட்டு, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
Next Story