போப்பாண்டவருக்கு குடல் அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாகத் தகவல்

குடல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் ஃப்ரான்சிஸ் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போப்பாண்டவருக்கு குடல் அறுவை சிகிச்சை - நலமுடன் இருப்பதாகத் தகவல்
x
குடல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு போப் ஃப்ரான்சிஸ் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 84 வயதான போப்பாண்டவர் ஃப்ரான்சிஸ் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, தற்போதுதான் முதன் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாடிகன் நகரின் கெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,  10 மருத்துவர்கள் கொண்ட குழு குடல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து போப் ஃப்ரான்சிஸ் நலமுடன் உள்ள நிலையில், எவ்வளவு நேரம் அறுவை சிகிச்சை நடந்தது மற்றும் எப்போது அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்புவார் போன்ற தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

Next Story

மேலும் செய்திகள்