இந்தியாவுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவுக்கு உதவிய இந்தியாவுக்கு, நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என ஜோ பைடன் அரசை வலியுறுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்
x
இந்தியாவுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்  

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்காவுக்கு உதவிய இந்தியாவுக்கு, நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என ஜோ பைடன் அரசை வலியுறுத்தும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அமெரிக்காவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று சில மருந்துகளுக்கு விதித்திருந்த ஏற்றுமதி தடையை நீக்கியது . அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் பிராட் ஷெர்மன் மற்றும் ஸ்டீவ் சாபோட்ஆகியோர் இணைந்து கொண்டு வந்த தீர்மானத்தில், இந்தியாவுக்கு தேவையான நிதியுதவிகளை செய்ய ஜோ பைடன் அரசை வலியுறுத்தும் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இது தவிர அமெரிக்க வர்த்தக நிறுவனங்களும் பொருள் உதவி உள்ளிட்டவை செய்ய வேண்டும் எனவும் இடம் பெற்றிருந்தது. இந்த தீர்மானம் இருகட்சி ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மருத்து உற்பத்தி துறையின் பங்களிப்பை சிலாகித்துள்ள அமெரிக்க தீர்மானத்தில், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகளை சேர்ந்த 93 நாடுகளுக்கு ஆறு கோடியே 60 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு இந்தியாவின் போராட்டத்தில், அமெரிக்கா தோளோடு தோள் நிற்கும் எனவும் தீர்மானம் சுட்டிக்காட்டி உள்ளது. ண














Next Story

மேலும் செய்திகள்