"டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பு" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் உருமாற்றம் தொடரும் என்பதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதே பாதிப்புகளை குறைப்பதற்கு ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"டெல்டா வகை கொரோனா அதிக பாதிப்பு" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் உருமாற்றம் தொடரும் என்பதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதே பாதிப்புகளை குறைப்பதற்கு ஒரே தீர்வு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், தற்போது பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்றும், இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட வைரஸ் வகையிலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது என்றும் எச்சரித்துள்ளார். இதனால் தடுப்பூசி செலுத்தப்படாத நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் தெரிவித்தார்.
Next Story