"ஈரானின் அடுத்த அதிபர் இப்ராஹிம் ரைசி"
ஈரானின் அடுத்த அதிபராக இப்ராஹிம் ரைசி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய அதிபர் ஹாசன் ரோஹானி, வரும் ஆகஸ்ட் மாதம் பதவி விலக உள்ளார்.
ஈரானின் அடுத்த அதிபராக இப்ராஹிம் ரைசி பதவி ஏற்க உள்ளார். தற்போதைய அதிபர் ஹாசன் ரோஹானி, வரும் ஆகஸ்ட் மாதம் பதவி விலக உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி, வெற்றி பெற்றுள்ளார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இப்ராஹிம் ரைசி, ஈரான் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவர சிறந்த திட்டங்களை தீட்டுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரானின் மூத்த தலைவரான இப்ராஹிம் உலகளவில் தெரிந்த முகம் இல்லை என்ற போதிலும், அவரது மக்கள் செல்வாக்கு அதிபராக உயர்த்தி இருக்கிறது.
Next Story