"மோசமான கட்டத்தில் ரஷ்ய - அமெரிக்க உறவு"- டிரம்பை வெகுவாக புகழ்ந்த புதின்
அமெரிக்கா உடனான உறவு மிக மோசமான நிலையில் உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். சில நாட்களில் அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்க உள்ள புதின், டிரம்ப்பை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஜூன் 16ஆம் தேதி ஜெனிவாவில் ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான உச்சி மாநாடு நடைபெற உள்ளது.இந்நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.பி.சி செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க ரஷ்ய உறவுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளதாக புதின் கூறியுள்ளார்.இந்தப் பேட்டியில் அமெரிக்காவின் முன்னான் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெகுவாக புகழ்ந்த புதின், அவர் ஒரு மிகத் திறமைவாய்ந்த, அபூர்வமான மனிதர் என்றார்.
தொழில்முறை அரசியல்வாதியான ஜோ பைடன், டிரம்பை விட முற்றிலும் மாறுபட்டவர் என்று புதின் கூறியுள்ளார்.ரஷ்யாவில் எதிர்கட்சி தலைவர்கள், எதிர்ப்பாளர்கள் பலரும் கொல்லப்பட புதின் தான் காரணம் என்றும் அவர் ஒரு கொலையாளி என்று ஜோ பைடன் மார்ச் மாதத்தில் கூறியதைப் பற்றி தனக்கு துளியும் கவலையில்லை என புதின் பதிலளித்துள்ளார்.அமெரிக்க பெரு நிறுவனங்கள் மீது சமீப காலங்கள் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், சைபர் பாதுகாப்பு பற்றி பைடனுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்த விரும்புவதாகவும் புதின் கூறியுள்ளார்.
Next Story