கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மனித ரோபோ

சோஃபியா எனும் மனித ரோபோவைத் தயாரித்த விஞ்ஞானிகள் குழு, தற்போது கிரேஸ் என்ற புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மனித ரோபோ
x
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் மனித ரோபோ

சோஃபியா எனும் மனித ரோபோவைத் தயாரித்த விஞ்ஞானிகள் குழு, தற்போது கிரேஸ் என்ற புதிய ரோபோவை உருவாக்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வயதானோருடன் உரையாடும் வகையில், இந்த ரோபோவானது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசியர்களின் உருவ அமைப்பைக் கொண்ட இந்த ரோபோவின் மீது, வெப்ப நிலையை பரிசோதிக்கும் பொருட்டு தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்டு, நோயாளி குறித்து தெரிந்து கொள்ளும் இந்த மனித ரோபோ, ஆங்கிலம், மாண்டரீன், காண்டோனீஸ் ஆகிய மொழிகளில் பேசவல்லது. முன்களப் பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் பொருட்டு இது போன்ற மனித ரோபோக்கள் உருவாக்கப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்