இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பு - பிரதமர் நெதன்யாகுவின் பதவி பறிபோகிறது
இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளதால், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளதால், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிபோகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. 4 முறையும் எந்த கட்சிக்கும் அங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், லிகுட் கட்சியை சேர்ந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவே பதவியில் நீடித்தார். இதனிடையே, இஸ்ரேல் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் நெதன்யாகுவை பதவியில் இருந்து இறக்க முடிவு எடுத்தன. யாஸ் அடிட் மற்றும் நியூ ரைட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்நிலையில், இவ்விரு கட்சிகளும் கூட்டணி உடன்பாட்டை வெற்றிகரமாக முடித்து உள்ளன. இந்த தகவலை இவ்விரு கட்சிகளின் தலைவர்களும், தொலைபேசி மூலம், அந்நாட்டு குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது பிரதமராக உள்ள நெதன்யாகுவின், பதவி பறிபோகும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இதனால், எதிர்க்கட்சி தொண்டர்கள் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story