உருமாற்றம் அடைந்த கொரோனா காற்றில் மிக வேகமாக பரவுவதால் அச்சம் - வியட்நாம் சுகாதாரத்துறை தகவல்
வியட்நாம் நாட்டில் காற்றில் மிக வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
உருமாற்றம் அடைந்த கொரோனா காற்றில் மிக வேகமாக பரவுவதால் அச்சம் - வியட்நாம் சுகாதாரத்துறை தகவல்
வியட்நாம் நாட்டில் காற்றில் மிக வேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் உருமாற்றம் கொண்ட வைரஸின் இரண்டு பண்புகளையும் கொண்டிருப்பதாக அந்நாட்டின், சுகாதாரத்துறை கூறியுள்ளது. இந்த வைரஸ் காற்றில் மிக வேகமாக பரவுகிறது என்றும்,கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து, மற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் கூட்டு பண்புகளை இந்த புதிய வைரஸ் கொண்டுள்ளதாக வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சர் கியூயென் தாங்ஹ் தெரிவித்துள்ளார்.
Next Story