முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை - 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை - 12ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
x
இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது, இலங்கை படையினரால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும், மே 18ல் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -10 பேர் கைது

இலங்கை மட்டகளப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், யாழ்ப்பாணம் தேவாலயத்தில் உள்ள நினைவுத் தூணில் நினைவேந்தலை அனுசரிக்க முயன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
 

நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பு - முன்னாள் எம்.பி.யை கைது செய்ய முயற்சி


இலங்கை தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கத்தை போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க முயன்ற அவரை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர்.

12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : கொரோனா அச்சுறுத்தல் - மக்கள் நடமாட தடை

இலங்கையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பல இடங்களில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுசரிக்கப்படுகிறது. இதன் 12ம் ஆண்டு நினைவு தினமான நேற்று கொரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேவேளையில், இலங்கை போரின் வெற்றியை கொண்டாடும் நிகழ்வு, பத்தரமுல்ல பகுதியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்