இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை
x
இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.கேரளாவை சேர்ந்த 31 வயதான சௌமியா என்ற பெண் இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் இருந்து செயல்படும் ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு ராக்கெட்களை இஸ்ரேல் பாதுகாப்பு ஏவுகனைகள் தடுத்து அழித்தன. சில ராக்கெட்டுகள் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்த‌தாக தெரிகிறது. இதில் சௌமியா உள்ளிட்ட 3 பெண்கள் உயிரிழந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். சௌமியாவுக்கு சந்தோஷ் என்ற கணவரும், 9 வயது மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலின் லோட் நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஜெருசலமில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு போலீசார் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள லோட் நகரில் யூதர்களின் வீடுகள், கடைகள், கார்களுக்கு அரேபியர்கள் தீ வைத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அங்கு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான ராக்கெட் வீச்சு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது. தாக்குதலில் 32 பாலஸ்தீனியர்களும், 3 இஸ்ரேலியர்களும் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பும் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்