தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்க தடை... இந்தியாவுக்கான தடை நீக்க அமெரிக்கா மறுப்பு
தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்க தடை... இந்தியாவுக்கான தடை நீக்க அமெரிக்கா மறுப்பு
தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்க தடை... இந்தியாவுக்கான தடை நீக்க அமெரிக்கா மறுப்பு
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்க விதித்திக்கும் தடையை நீக்க அமெரிக்கா மறுத்துள்ளது.அமெரிக்காவின் உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை வழங்கும் நிறுவனங்கள், இந்தியாவுக்கு தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க மறுத்து வருகின்றன. இவ்விவகாரத்தை ஜோ பைடன் நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்தியா கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது எனக் கூறி தடையை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளது. உலகில் அமெரிக்காவே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றும் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட்டால் பிற நாட்டவர்களுக்கு கொரோனா பரவாது என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
Next Story