ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை? ரஷ்யா மீது பைடன் எடுக்கும் முதல் நடவடிக்கை
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன. நவால்னி கைது விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவாக அமெரிக்காவும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா நடத்திய சைபர் தாக்குதலும் பொருளாதார தடைக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவுடன் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.
Next Story