கலிபோர்னியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - கலிபோர்னியா ஆளுநர் கவலை
கலிபோர்னியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கலிபோர்னியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக, மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து
கலிபோர்னியா ஆளூநர் கெவின் நியூசம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 14 நாட்களில் மட்டும் 4000 பேர் கொரோனா பாதிப்பினால் இறந்திருப்பதாகத் தெரிவித்தார். இது மிகவும் மோசமான பெருந்தொற்று எனவும் விடுமுறையை முன்னிட்டு தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கூறினார்.மேலும் இது மருத்துவர்களுக்கு
மிகவும் கடினமான காலம் என்றும் கவலை தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்க அரசு, தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள இடங்களில் முதலில் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதில் முனைப்புடன் உள்ளது.
Next Story