நிலவுக்கு 18 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம் : இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரிக்கு இடம்

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரி இடம்பெற்றுள்ளார்.
நிலவுக்கு 18 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டம் : இந்திய வம்சாவளி வீரர் ராஜா சாரிக்கு இடம்
x
ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்கு விண்கலம் மூலம் 18 விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 9 விண்வெளி வீரர்கள் மற்றும் 9 வீராங்கனைகளின் பெயரை வெளியிட்டுள்ளது. இதில் ஒரு வீராங்கனையும், வீரரும் வரும் 2024-ம் ஆண்டு நிலவின் தெற்கு பகுதியில் கால் பதிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரியும் இடம்பெற்று இருக்கிறார். அமெரிக்காவில் விமானப்படை அதிகாரியாக பணியாற்றிய ராஜா சாரியின் தந்தை, நிவாஸ் வி சாரி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். 1977-ம் ஆண்டு விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்த ராஜா சாரி, அமெரிக்க விமானப்படை கல்லூரியில் விண்வெளிப் பொறியியல் படித்தவர். மசாசூசெட்ஸ் அறிவியல் நிறுவனத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளித் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது 43 வயதாகும் ராஜா சாரி 2017-ல் விண்வெளி வீரராக நாசாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்