டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்க முயற்சி - புதிய ரக டிஜிட்டல் கரன்சி இலவசம்
மக்களிடையே டிஜிட்டல் கரன்சியின் பயன்பாட்டை ஊக்குவிக்க சீன அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
மக்களிடையே டிஜிட்டல் கரன்சியின் பயன்பாட்டை ஊக்குவிக்க சீன அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஜியங்ஸு மாகாணத்தில் உள்ள சுஸொவ் நகரில், ஒரு லட்சம் பேருக்கு நகராட்சி நிர்வாகம் அரசின், தலா 200 யுவான் மதிப்புள்ள புதிய ரக டிஜிட்டல் கரன்சியை இலவசமாக அளித்துள்ளது. அவற்றை பயன்படுத்தி டிசம்பர் 11 முதல் 27 ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையகங்களில் மக்கள் பொருட்களை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சோதனை முயற்சி சமீபத்தில் சீனாவின் சென்ஷென் நகரில் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story