நிலவில் சீனாவின் சாங்கி 5 விண்கலம் - வெற்றிகரமாக சுற்றிவருகிறது என சீனா தகவல்
நிலவில் இருந்து கற்கள் மற்றும் மண்ணை ஆய்வுக்கு எடுத்துவரும் வகையில் சாங்கி 5 என்ற விண்கலத்தை சீனா கடந்த 24-ம் தேதி அனுப்பியது.
நிலவில் இருந்து கற்கள் மற்றும் மண்ணை ஆய்வுக்கு எடுத்துவரும் வகையில் சாங்கி 5 என்ற விண்கலத்தை சீனா கடந்த 24-ம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக சுற்றிவருகிறது எனவும் காலை 4. 40 மணியளவில் விண்கலத்தில் இருந்து மாதிரிகளை சேமிக்கும் லேண்டர் கலம் வெற்றிகரமாக பிரிந்தது எனவும் இன்று சீனா தெரிவித்து உள்ளது. கற்கள் மற்றும் மண்ணை எடுத்துக்கொண்டு மேலே வரும் லேண்டர் கலம் தாய் விண்கலத்துடன் இணைந்து பூமி திரும்பும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story