ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம்
x
வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ஹைத்தியில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.  117 நாடுகள் வறுமை பட்டியலில் அந்த நாடு 111 வது இடத்​தை பிடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் 26 லட்சம் பேர் உணவின்றி தவித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 37 லட்சமாக அதிகரித்துள்ளது. ஹைத்தியில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக அந்நாட்டுக்கு சர்வதேச உதவி கிடைப்பதில் சிக்கள் நிலவி வருகிறது. இது பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்கேடு அடையச் செய்து, வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில், அதிபர் ஜோவெனல் மொய்ஸிக்கு எதிராக அங்கு போராட்டம் வலுத்து வருகிறது. அதிபருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஹைத்தி மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தை தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினர் மீது மக்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல இடங்களில் தடுப்பு கட்டைகள் தீக்கிரையாகி வருகிறது. அதிபரின் ஊழல் மற்றும் பொருளாதார மந்த நிலை அவருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்