தாய்லாந்தில் மன்னருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

தாய்லாந்தில் மன்னருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற வாத்து பொம்மைகள் பலரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
தாய்லாந்தில் மன்னருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
x
தாய்லாந்து மன்னரின் அதிகாரத்தை குறைக்க வலி​யுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய போராட்டம், தற்போது, முன்னாள் ராணுவ ஆட்சிக் குழுவின் தலைவரான பிரதம மந்திரி பிரயுத் சான்-ஓச்சாவை பதவியில் இருந்து ​​அகற்றக் கோரி திரும்பி உள்ளது. அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் செய்யவும் கோரி மக்கள் அங்கு  போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாங்காக்கில் திரண்ட போராட்டக்காரர்களை போலீசார் மற்றும் ராணுவத்தினர் ரப்பர் குண்டு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்து வருகின்றனர். அதிலிருந்து தப்பிக்க போராட்டக்காரர்கள் காற்று ஊதப்பட்ட பெரிய வாத்து பலுன்களை பயன்படுத்தியும், கவசங்களை அணிந்தும் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். இந்த பலுன்களை ஒரு ஈர்ப்புக்காக கொண்டு வந்ததாகவும், தற்போது அது பாதுகாப்பு கவசமாக பயன்படுவதாகவும், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அடுத்தக்கட்ட போரட்டம் வரும் 25 ஆம் தேதி மன்னரின் சொத்து பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும், பல கோடி டாலர் சொத்துக்கள் மன்னரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தொடர்ந்து  போராட்டம் நடத்த உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்