சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் - 17 வயது சிறுவனுக்கு அமைதிக்கான விருது

வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார்.
சைபர் குற்றங்களுக்கு எதிராக செயலி உருவாக்கம் - 17 வயது சிறுவனுக்கு அமைதிக்கான விருது
x
வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார். சைபர் குற்றங்கள், குழந்தைகளை மோசமாக பாதித்து வரும் நிலையில், இந்த செயலி பயனுள்ளதாக இருந்துள்ளது. இதையடுத்து, குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கி வரும் கிட்ஸ் ரைட்ஸ் நிறுவனம், சதாத் ரஹ்மானை அமைதி விருதுக்காக தேர்ந்தெடுத்தது. நெதர்லாந்தில் நடைபெற்ற விழாவில், நோபல் விருதுபெற்ற மலாலா யூசப்சாய், இவ்விருதினை வழங்கி கவுரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்