அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார் டிரம்ப் - டொனால்ட் டிரம்ப் ஆலோசகர்கள் கருத்து
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஒருவேளை டிரம்ப் ஏற்றுக் கொண்டாலும், தமது தோல்வியை ஒரு போதும் அவர் ஒப்புக் கொள்ளமாட்டார் என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஒருவேளை டிரம்ப் ஏற்றுக் கொண்டாலும், தமது தோல்வியை ஒரு போதும் அவர் ஒப்புக் கொள்ளமாட்டார் என அவரது ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்த வாரத்தில், அமெரிக்க அதிபர் தேர்தலை நிர்ணயிக்கும் மாகாணங்கள், தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், டிரம்ப்புக்கு நெருக்கமான பலரும் இதனை தான் கூறி வருகின்றனர். தேர்தல் முடிவில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதேநேரத்தில் அதனை எதிர்த்து வழக்கு தொடரப் போவதில்லை என்று தான் டொனால்ட் டிரம்ப் கூறுவார் என அவருடன் இணைந்து பணியாற்றிய பலரும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபரின் உதவியாளராக ரான் க்ளான் நியமனம்
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் நீண்டக்கால அரசியல் உதவியாளரான ரான் க்ளான், அதிபரின் உதவியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் ரான் க்ளான், ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருந்து மீள உதவியவர்களில் ரான் க்ளானும் ஒருவர் என கூறப்படுகிறது. அதேபோல எபோலா தொற்றை துடைத்தெறிய ஓபாமா நியமித்த குழுவின் தலைவராக வெற்றிக்கரமாக செயல்பட்டவர் ரான் க்ளான் என கூறப்படுகிறது. ஜோ பைடன் செனட்டராக இருந்த போது முதன்முறையாக கடந்த 1989 ஆம் ஆண்டு அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கி உள்ளார் ரான் க்ளான். தமது நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரான் க்ளான், ஜோ பைடன் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு இது என்றும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பணியில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கும், ஜனநாயக கட்சி குழுவினருக்கும் உதவுவேன் என ரான் க்ளான் தெரிவித்துள்ளார்.
இடா புயலின் கோர தாண்டவம் - மக்கள் வீடுகள் இழப்பு- வாழ்வாதாரமின்றி தவிப்பு
இடா புயலால் மெக்சிகோ மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மத்திய அமெரிக்கா நாடுகளில் தன் கோர தாண்டவத்தை காட்டிய இடா புயல் தற்போது வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையால் மெக்சிகோவின் டபாஸ்கோ நகரம் தண்ணீரில் மூழ்கியது. தொடர் கனமழையால் வீடுகளை இழந்த மக்கள் அடுத்தவேளை உணவுக்கு நீண்ட வரிசையில் நின்று பொட்டலங்கள் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மாஸ்க்கில் முகத்தை வரைந்து தரும் ஓவியர் - ஓவியரின் முயற்சிக்கு மக்களிடையே வரவேற்பு
பிரேசிலில் ஓவியர் ஒருவரின் முக கவச ஓவியம் அனைவரையும் கவர்ந்து உள்ளது. கொரோனாவின் 2-வது அலை காரணமாக பிரேசிலில் மீண்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கெடுபிடி காட்டப்பட்டு உள்ளது. முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முக கவசம் அணிபவரின் முகத்தை முக கவசத்தில் வரைந்து வரும் ரோரிஸ் என்ற ஓவியரின் வித்தியாசமான முயற்சி அந்நாட்டு மக்களை கவர்ந்து உள்ளது.
உணவை வீணாக்கினால், கடும் நடவடிக்கை - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை
உணவு மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார். அண்மையில் நடந்த உணவு விருந்து விழாவுக்கான விளம்பரத்தை பார்த்த அவர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் உணவுப் பஞ்சம் புதிதல்ல என கூறும் அவர், உணவை எந்த வகையிலும் வீணடிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளார். இதனால், உணவு தானியங்களை சந்தைக்கு கொண்டுவருவதை விவசாயிகள் நிறுத்தி உள்ளனர். உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஒருவித அச்சமடைந்து உள்ளனர்.
Next Story