"இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விருப்பம்" - இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தகவல்
இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை தமிழ் பிரதேசங்களின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் என்பதால் தங்கள் மீது இந்தியா கூடுதல் அக்கறை செலுத்துவதை உணர முடிகிறது என்று கூறியுள்ளார். இந்தியாவின் தலையீடு தமிழனத்தின் விடுதலைக்கும், தமிழ் தேசத்தின் பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
Next Story