இலங்கை எம்.பி. ரிசாத் பதியுதீன் கைது - அரசு சொத்தை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு
இலங்கையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை போலீசார் கைது செய்துள்ளனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் பகுதியில் இருந்து 222 பேருந்துகளில் பொதுமக்களை அழைத்து சென்று வாக்களிக்க வைத்ததாக இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, பேருந்து கட்டணமாக சுமார் 90 லட்சத்தை கட்டாமல், அரசு சொத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், ரிசாத் புதியுதீனை கடந்த 5 தினங்களாக தேடி வந்த போலீசார், தெகிவளை பகுதியில் வைத்து இன்று காலையில் கைது செய்தனர்.
Next Story