அமெரிக்க துணை அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் - பென்ஸ் காரசார வாதம்

அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் இது என்று பேசிய கமலா ஹாரிஸுக்கு, ஆட்சி மாற்றத்திற்கு இடமே இல்லை என மைக் பென்ஸ் பதிலடி கொடுத்தார்.
அமெரிக்க துணை அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் - பென்ஸ் காரசார வாதம்
x
நேருக்குநேர் விவாதத்தில் பேசிய துணை அதிபர் வேட்பாளர்கள் இருவரும், கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணம் அநீதியானது என்றனர். 

தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், இனவாதம் பற்றி பேச டிரம்ப் அரசு தயாராக இல்லை என விமர்சித்தார். 

அமெரிக்காவின் அடிப்படையிலேயே இனவாதம் இருப்பதாக கருதுவது தவறு என்று பென்ஸ் பதிலளித்தார். 

நீதிபதி நியமனத்தில் ஒருவராவது கருப்பினத்தை சேர்ந்தவரா என கமலா ஹாரிஸ் கேள்வி எழுப்பினார். 

உச்சநீதிமன்ற நீதிபதியாக டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டவர் மிகச்சிறந்தவர் என பென்ஸ் விளக்கம் அளித்தார்.

Card-6 விதவிதமான முகங்களை கொண்ட அதிபர் டிரம்ப், வாக்குறுதிகளை ஒருபோதும் காப்பாற்றியது இல்லை என கமலாஹாரிஸ் குற்றம்சாட்டினார். 

டிரம்ப் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு அதிகரித்துள்ளதால் ஜனநாயக கட்சிக்கு வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2016-ஐ போல் 2020 தேர்தலிலும் டிரம்புக்கே மக்கள் வெற்றியை தருவார்கள் என பென்ஸ் கூறினார்.  

இதனை மறுத்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் இது என்றார்.  

ஆட்சி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, மீண்டும் டிரம்ப் தான் அதிபர் என மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்