தென் கொரியாவில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'அறிமுகம் - விரைவில் விற்பனைக்கு வருகிறது
தென் கொரியாவில் காற்றிலிருக்கும் மாசை சுத்தம் செய்யும் வகையில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மற்றும் காற்று மாசு அச்சம் காரணமாக பொதுமக்கள் 'மாஸ்க்'அணிவது அதிகரித்துள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் மாஸ்குகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று காற்றிலிருக்கும் மாசை சுத்தம் செய்யும் வகையில் எலக்ட்ரானிக் 'மாஸ்க்'ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது.
நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள 'மாஸ்க்'பேட்டரி உதவியுடன் இயங்குகிறது. மாஸ்க்கில் இரண்டு பேன்கள், எச்இபிஏ காற்று சுத்திகரிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பான்கள் உள்வரும் காற்றையும், வெளிச்செல்லும் காற்றையும் தூய்மையாக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரியின் வேகத்தையும், சுவாசத்திற்கு ஏற்ப சுத்திகரிப்பு வேகத்தையும் மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Next Story