"பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்" - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
x
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் சர்வதேச சபாநாயகர்கள் மாநாடு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஓம் பிர்லா, பாகிஸ்தான் மண்ணில் சுமார் 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக அந்நாட்டு பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்ற நாட்டினரும் பாகிஸ்தானை முன்னணி நாடாக கருதுவதாக தெரிவித்துள்ளார். எனவே சர்வதேச சமூகம், பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று  சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்