எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை - அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகம் அங்கீகாரம்

மனிதர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை - அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகம் அங்கீகாரம்
x
அமெரிக்காவின் யேல் பல்கலைகழகம் இந்த கொரோனா மருத்துவ பரிசோதனையை உருவாக்கி உள்ளது.  சலைவா டைரக்ட் எனப்படும் இந்த புதிய வகை சோதனை முறையில் ஒரு மைக்ரோ லிட்டர் எச்சிலில் 6 முதல் 12 வைரஸ்கள் இருந்தால் கூட கண்டறிய முடியும். இது தற்போதைய தொண்டை திரவ சோதனையை விட இதன் துல்லியத்தன்மை மிக அதிகமாக, 93 சதவீதமாக உள்ளது. இனி கொரோனா பரிசோதனையை, மிக எளிமையாக, விரைவாக அதிக எண்ணிக்கையில் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்