ஒரே நாளில் 1,13,609 பேருக்கு கோவிட்19 பரிசோதனை - ஒரு கோடி பேருக்கு சோதனை நடத்த சீனா வியூகம்
சீனாவின் வூகான் நகரில் கடந்த 15 ஆம் தேதி ஒரே கட்டமாக 1 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
சீனாவின் வூகான் நகரில், கடந்த 15 ஆம் தேதி ஒரே கட்டமாக 1 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சீனாவில் மீண்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சீனா ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிட்டது. முதல் கட்டமாக, 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு, அந்நாட்டு சுகாதாரத்துறை கோவிட் - 19 பரிசோதனை செய்துள்ளது. இது கடந்த கால பரிசோதனைகளை விட 50 சதவிகிதம் அதிகம் ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று, 79 ஆயிரத்து 791 மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story