ஊரடங்கை 37 குழந்தைகளுடன் சமாளிக்கும் குடும்பம் - உற்சாகம் ததும்ப வீடெங்கும் குழந்தைகள்...
ஊரடங்கில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க திண்டாடும் பெற்றோருக்கு மத்தியில் சுமார் 37 குழந்தைகளுடன் கொரோனாவை ஒற்றுமையாக சமாளித்து வரும் தம்பதியர்
மத்திய அமெரிக்க நாடானா கோஸ்டா ரிக்காவில் தான் வசிக்கிறது இந்த குடும்பம்.. நவீன காலத்தில் 37 குழந்தைகள் கொண்ட குடும்பமா ? என்று நமக்கு தொன்றலாம்...விக்டர் குஸ்மான் - மெல்பா ஜிமெனெஸ் பிறந்தது ஆறு குழந்தைகள் தான்... ஆனால் தம்பதியர் இருவரும் சேர்ந்து பல ஆண்டுகளாக குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்..
தற்போது அந்த வீட்டில் நான்கு வயது முதல் திருமண வயதை அடைந்த இளைஞர்கள் என வயது வாரியாக 37 பேர் இருப்பதை காண முடிகிறது... கோஸ்டா ரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைவு என்றாலும் அங்கு தற்போது சுமார் 300 பேர் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை 39 குடும்ப உறுப்பினர்களுடன் தீவிரமாக கடைபிடித்து வருகிறது, இந்த குடும்பம் வீட்டு வேலைகளை அனைவரும் பகிர்ந்து செய்வதாக தெரிவிக்கும் குழந்தைகள், தாங்கள் யாரும் வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஒட்டுமொத்த குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க, தம்பதியரின் 21 வயது மகன் மட்டுமே வெளியே செல்கிறார். இவரை தவிர யாரும் வீட்டை விட்டு செல்வதில்லையாம்..
இப்படி குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வரும் இந்த தம்பதிக்கு அரசு மட்டுமின்றி
தன்னார்வலர்களிடம் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன...
Next Story