உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்திய டிரம்ப் - பில்கேட்ஸ் கடும் எதிர்ப்பு

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை அமெரிக்கா நிறுத்தியது ஆபத்தானது என உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்திய டிரம்ப் - பில்கேட்ஸ் கடும் எதிர்ப்பு
x
வைரஸ் பற்றி உலக சுகாதார அமைப்பு தவறான தகவல்களை தெரிவித்ததாக கூறி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் , தற்காலிகமாக நிதி வழங்குவதை நிறுத்துவதாக கூறினார். இது குறித்து பில் கேட்ஸ் கூறுகையில் டிரம்பின் முடிவு தவறானது என்றும் முன்பை விட அமெரிக்காவுக்கு தற்போது உலக சுகாதார அமைப்பின் உதவி தேவை என தெரிவித்து உள்ளார். உலக சுகாதார அமைப்பிற்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்