இத்தாலியை வாட்டி வதைக்கும் கொரோனா...
கொரோனா தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று.
* மார்ச் தொடக்கத்தில்தான் இத்தாலியில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டது. ஆனால் மிக வேகமாக 40 ஆயிரம் பேர் வரை தொற்று ஏற்பட்டது. தற்போதுவரை இறப்பு விகிதம் 8 சதவீதமாக இருக்கிறது.
* ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* விமான நிலையங்ங்கள், பள்ளி, கல்லூரி, தேவாலயங்கள், மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* உடற்பயிற்சி மையங்கள், சினிமா, இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் எதுவும் இயங்கவில்லை.
* ஓட்டல்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மக்கள்1 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு போலீஸ் அனுமதியுடன் பயணம் செய்யலாம்.
* வாகனங்கள் போலீஸ் சோதனைகளுக்கு பின்னரே சாலைகளில் அனுமதிக்கப்படுகின்றன.
* மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் விடுமுறை இல்லாமல் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
* சிறைச்சாலைகளில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
* செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் அரசு ரத்து செய்துள்ளது.
* நோய் அறிகுறி அறிந்த பின்னர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தொந்தரவு அளித்த 40 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
* இதற்கிடையே, மனநெருக்கடியில் இருந்து வெளிவர மக்கள், மாடிகளில் நின்று இசைக் கருவுகளை இசைத்து மகிழ்வதும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
Next Story