கொரோனா தாக்கம்: அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை - அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கையை குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்குதலுக்கு, அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். கொரோனா நோய் சீனாவில் இருந்து பரவியது என்றாலும், யார் ஒருவரின் தவறும் இல்லை என்றும், யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். நாம் அனைவரும் சேர்ந்து இந்த சிக்கலுக்கு தீர்வு காண்போம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கத்தை தடுக்கும்பொருட்டு அவசர சட்டத்தையும் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. நோய் தாக்கம் கொண்டவர்கள் மட்டுமல்லாமல், தேவையானவர்களுக்கு தேவையான விடுமுறை அளிக்கவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்கர்கள் அனைவரும் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story