கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி - கை கழுவ கற்று தரும் கலக்கல் நடனம்

கெரோனா வைரஸ் தாக்காமல் இருக்க எப்படி கை கழுவ வேண்டும் என கலக்கல் நடனத்துடன் கற்று கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி - கை கழுவ கற்று தரும் கலக்கல் நடனம்
x
கையை எப்படி கழுவணும்னு சும்மா சொன்னா பத்தாதுங்க. ஓ பாட்டாவே படிச்சிட்டியாங்கற மாதிரி இவங்க டான்ஸாவே ஆடிக் காட்டுறாங்க பாருங்க... வியட்னாம் நாட்டைச் சேர்ந்த Quang Afng அப்படீங்கற டான்ஸர்தான் இப்படி ஒரு வீடியோவை பதிவிட்டிருக்காரு. பாக்க ஜாலியா இருந்தாலும் எப்படி கை கழுவணும்னு இதுல காட்டியிருக்குற முறையெல்லாம் பக்காவா இருக்கு. அதனாலதான் ஐ.நாவோட கிளை நிறுவனமான UNICEF, இந்த வீடியோவை ஷேர் பண்ணியிருக்கு. கொரோனா வராம எப்படியெல்லாம் கை கழுவணும்னு நல்லா பார்த்துக்கங்க...


Next Story

மேலும் செய்திகள்