ஈரானில் பரவும் கொரோனா - 58 இந்தியர்கள் மீட்பு
ஈரான் நாட்டிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட 58 இந்தியர்களை மத்திய அரசு முதல்கட்டமாக மீட்டது.
ஈரான் நாட்டிற்கு புனிதப்பயணம் மேற்கொண்ட 58 இந்தியர்களை மத்திய அரசு முதல்கட்டமாக மீட்டது. ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்குள்ளவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து இந்திய விமானப்படையினர் பாதுகாப்பு உபகரணங்களோடு IAF C-17 Globemaster விமானத்தில் 58 பேரை மீட்டனர். 58 பேருக்கும் கொரோனா உள்ளதா என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனிடையே சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமானப்படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Next Story