தமிழ், சிங்கள மொழி திருப்பலியுடன் கச்சத் தீவு திருவிழா நிறைவு : மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள்

கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் சிறப்பு ஆராதனையுடன் நடைபெற்றது.
தமிழ், சிங்கள மொழி திருப்பலியுடன் கச்சத் தீவு திருவிழா நிறைவு : மகிழ்ச்சியுடன் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள்
x
கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா, தமிழ் மற்றும் சிங்கள மொழியில் சிறப்பு ஆராதனையுடன்  நடைபெற்றது. 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத் தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நேற்று நிறைவுற்றது. இதில், இருநாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் பக்தர்கள், யாழ் அமைச்சர் மற்றும் சிவகங்கை, யாழ் மறை மாவட்ட ஆயர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இசை முழக்கத்துடன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவிழா முடிந்து அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில், படகுகள் மாயமானதால், வவுனியா மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்த நூறு பக்தர்கள் அங்கேயே உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படகுகளை இலங்கை கடலோர காவல் படையினர் தேடிவருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்