தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு - மோடி, டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து அவர்கள் இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. பின்னர் கூட்டாக இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தீவிரவாதத்தை ஒடுக்க இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்ததாக பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் தெரிவித்தனர். முன்னதாக, ஐதராபாத் இல்லம் வந்த இருவரும் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
டெல்லியில் அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
* இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
* அப்போது, 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ராணுவ உபகரணங்கள் வழங்குவது குறித்த ஒப்பந்தங்களுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
* பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து தங்கள் குடிமக்களைப் பாதுகாக்க இந்தியா, அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.
* அதிபராக பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி 60 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக கூறினார்.
* இதன் பின் பேசிய பிரதமர் மோடி, சைபர் கிரைம், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், குறித்து விவாதித்ததாக கூறினார்.
* தீவிரவாதத்தை தடுப்பதற்கான வழிமுறை குறித்து விவாதித்தோம் என்றும் இருவரும் ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
* பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடங்க, இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Next Story