மனைவியுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காதல் சின்னமான தாஜ்மகாலை, தனது மனைவியோடு சுற்றிப்பார்த்தார்.
மனைவியுடன் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த டிரம்ப்
x
குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்புக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  உத்தரப்பிரதேச ஆளுநர் அனந்தி பென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரை வரவேற்றனர். 

வரவேற்புக்கு பின், தாஜ்மகால் நோக்கி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் காரில் புறப்பட்ட அதிபர் டிரம்ப்க்கு, வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தாஜ்மகால் சென்றதும் பார்வையாளர் பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்த டிரம்ப், காதல் சின்னமான தாஜ்மகாலை அங்குலம் அங்குலமாக ரசித்து பார்த்தார். தனது மனைவியுடன் படமும் எடுத்துக் கொண்டார்.

டிரம்ப், அவரது மனைவி  மெலனியா இருவருடன் தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் மட்டுமே கூடவே சென்று தாஜ்மகாலை சுற்றிக் காட்டினார். 

டிரம்புடன் சென்ற அவரது மகள் இவாங்கா, மருமகன்  ஜேர்டு குஷ்னர் இருவரும் ஜோடியாக காதல் சின்னத்தை சுற்றிப் பார்த்ததோடு, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

தாஜ்மகாலை ஒரு மணி நேரத்துக்கு மேலாக சுற்றிப்பார்த்த பிறகு, அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் குழுவாக டிரம்ப் தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனால், அங்கிருந்த காவலர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்