அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி : விமான நிலையத்தில் பாரம்பரிய நடனங்களுடன் உற்சாக வரவேற்பு

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி : விமான நிலையத்தில் பாரம்பரிய நடனங்களுடன் உற்சாக வரவேற்பு
x
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் மூலம் காலை11.40 மணியளவில் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திற்கு வந்த டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார்.

விமான நிலையத்தில், முப்படைகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து, காருக்கு செல்லும் வழியில், குஜராத் பாரம்பரிய கலை நிகழ்ச்சியான மண்பாண்ட நடனம்,  குடை நடனம் நடைபெற்றது. 

இதையடுத்து, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரத்துக்கு அதிபர் டிரம்ப் சென்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் திரண்டு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தனர். 

சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற  டிரம்ப் அங்கு, காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். ஆசிரமத்தில்  காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டதுடன், கை ராட்டையை பார்வையிட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென அமர்ந்து கை ராட்டையை இயக்குவது குறித்த செயல்முறையை கேட்டார். மெலனியாவும் அவருடன் அமர்ந்ததால், அவர்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். ஆசிரம நிர்வாகிகளும் ராட்டையில் நூல் நூற்பது குறித்து விளக்கினர்.   

ஆசிரமத்தை பார்வையிட்ட பின்னர், அங்குள்ள திண்ணையில் அமர்ந்து, பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் கூட்டாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். 

Next Story

மேலும் செய்திகள்