நாளை இந்தியா வருகிறார் டிரம்ப் - வணக்கம் டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப், மோடி உரை
இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப், நாளை இந்தியா வருகிறார்.
வணக்கம் டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப், மோடி உரை
மொடேரா கிரிக்கெட் மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெறும் வணக்கம் டிரம்ப் நிகழ்ச்சியில் இரு நாட்டு தலைவர்களும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்த உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் குஜராத்தின் அகமதாபாத் பக்கம் திரும்பியுள்ளது.
மனைவி, மகள், மருமகனுடன் டிரம்ப் இந்தியா வருகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில், அவருடன் மருமகனும், மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர்,அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஓ பிரைன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினரும் வருகை தர உள்ளனர். டிரம்ப் பயணத்தின் போது இந்திய அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மனைவி மெலானியா, மகள் இவாங்கா மற்றும் மருகமனுடன் சேர்ந்து டிரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளார்.
பாகுபலி மீம் வீடியோ - அதிபர் டிரம்ப் வரவேற்பு
தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் லைக் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவை குறிப்பிட்டு இந்தியாவில் உள்ள நண்பர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை மொடேரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்
இரண்டு நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப், நாளை இந்தியா வருகிறார். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் வந்து இறக்கும் அவர், பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார். பின்னர் உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானமான மொடேரா கிரிக்கெட் அரங்கத்தை திறந்து வைக்கிறார்.
டிரம்ப் வருகை - விமான நிலையத்தில் புதிய தேசிய கோடி ஏற்றம்
அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பின் பிரத்யேக விமானம் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்க உள்ளது. அதிபர் டிரம்ப் உடன் உயர் அதிகாரிகளும் வர உள்ளனர்.
டிரம்ப் வருகையையொட்டி, அகமதாபாத் விமான நிலையத்தில் புதிய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.
Next Story