"சர்வதேசத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
"இந்தியா மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது"
தனக்கு இந்தியா மீது நம்பிக்கை இருப்பதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 1977ம் ஆண்டில் இருந்தே தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களுக்கிடையில் ஒற்றுமை அவசியம் என கூறி வந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சனைகள் இழுபறியாகவே இருப்பதாக கூறினார். வாக்குகளை பெறுவதற்காகவே, தமிழ் அரசியல் தலைவர்கள் காலம் காலமாக இதுபோன்ற கருத்துகளை கூறி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு சர்வதேச நாடுகளின் மீது நம்பிக்கை இல்லை எனவும் இந்தியா மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story