"சீன அரசு, போலீசாருக்கு ஆதரவாக குவிந்த மக்கள்"
ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது. கடந்த ஞாயிறன்று சாலைகளில் கற்களை குவித்ததோடு, பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது. கடந்த ஞாயிறன்று சாலைகளில் கற்களை குவித்ததோடு, பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்நிலையில், வன்முறை சம்பவங்களுக்கு எதிராகவும் சீன அரசுக்கு ஆதரவாகவும் ஹாங்காங்கில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அங்குள்ள டாமர் பூங்காவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு, 'வன்முறைக்கு விடை கொடுப்போம்' என கோஷமிட்டபடி சீனா மற்றும் ஹாங்காங் கொடிகளுடன் திரண்டிருந்தனர்.
Next Story