பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
பிரம்மாண்ட மனித ராக்கெட் - 11,443 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
சார்ஜா இந்திய சர்வதேச பள்ளிக்கூட வளாகத்தில் 11 ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் மனித ராக்கெட்டை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். அமீரகத்தில் இருந்து ஹசா அல் மன்சூரி முதல் முறையாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து விண்வெளித்துறையில் அமீரகம் காட்டி வரும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், அமீரகத்தின் 48 வது  தேசிய தினத்தை முன்னிட்டும், பிரமாண்ட மனித ராக்கெட் உருவாக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 11ஆயிரத்து 443 மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து இந்த ராக்கெட் உருவத்தை த‌த்ரூபமாக உருவாக்கினர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்